விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.40 லட்சம் பறிமுதல்

அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரப்பதிவு மற்றும் அதற்கான கட்டணம் சரியாக உள்ளதா?, லஞ்சம் பெறபட்டுள்ளதா? என பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.


கோவை: கோவை, அன்னூர் அருகே நாகமாபுதூர் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்துள்ளன.

இதனையடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., திவ்யா தலைமையில் 6க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரப்பதிவு மற்றும் அதற்கான கட்டணம் சரியாக உள்ளதா? லஞ்சம் பெறபட்டுள்ளதா? என பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.



நேற்று இரவு 9 மணிக்கு துவங்கிய இந்த சோதனை இன்று காலை வரை நடைபெற்றது. சார் பதிவாளர் செல்வபாலமுருகன் மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனையின் போது, கணக்கில் வராத 1.40 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. இது குறித்து அன்னூர் சார் பதிவாளரான செல்வபாலமுருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...