பொள்ளாச்சியில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மாணவர்களுக்காக ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் நடைபெற்றது

மாணவ மாணவிகளின் பொதுத்தேர்வு வெற்றிக்காக பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்று, பல்வேறு மாவட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: ஜனவரி 29 அன்று, பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.



இந்த ஹோமம், தமிழ்நாடு மாநில பொதுத் தேர்வில் பங்கேற்கும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வெற்றி பெற ஆசிகளை பெறுவதற்கு நடத்தப்பட்டது.



இந்த நிகழ்வு, மாணவர்கள் உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும், தேர்வு எழுதும் போது அச்சமின்றி இருக்க வேண்டும் மற்றும் கல்வி ஞானத்தில் சிறப்பு பெற வேண்டும் என்பதை முன்னிறுத்தி நடைபெற்றது.



கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த ஹோமத்தில் பங்கேற்றனர்.



ஹோமத்தில் வேத மந்திரங்கள் முழங்க லஷ்மி ஹயக்ரீவருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. மாணவர்கள் லஷ்மி ஹயக்ரீவர் மகா மந்திரத்தை 21 முறை உச்சரித்து, தேர்வுகளில் சிறந்து விளங்க பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



இந்த நிகழ்வில் பல பெற்றோர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு பென்சில், பேனா ஆகியவை வழங்கப்பட்டது.

மாணவர்கள் கணிகா மற்றும் ரகுகுமார் இந்த சிறப்பு ஹோமத்தில் பங்கேற்று தங்கள் அனுபவங்களையும், தேர்வுக்கான எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...