கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

நாம் தமிழர் கட்சி மீது வெறுப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை செய்தால் அது தவறு. ஆனால் அதைப் பற்றி நாங்கள் இப்போது கருத்து சொல்வது சரியில்லை என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.



தொடர்ந்து அமைச்சர் முத்துச்சாமி பேட்டியின்போது கூறுகையில், 6 லட்சம் மதிப்புள்ள விலையில்லா சைக்கிள்கள் இன்று கொடுக்கப்பட்டுள்ளது.



பள்ளி நிர்வாகம் விளையாட்டுப் போட்டிகளை மிக அருமையாக நடத்தியுள்ளனர். அரசு சார்பாக நலத்திட்டம் நிகழ்ச்சி ஆர்.எஸ் புரத்தில் நடைபெறுகிறது. ஏழை அடிதட்டு மக்கள் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. மக்களோடு முதல்வர் திட்டத்தை தொடங்கி மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் நடவடிக்கை எடுத்து மிகச் சிறப்பாக மாவட்ட வாரியாக திட்டம் நடைபெற்று வருகிறது.

மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படுத்தி தீர்வு காணப்பட்டு வருகிறது. இதில் பல லட்சம் மக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. 601 பேர் மனுக்களுக்கான தீர்வை நாங்கள் இன்று கொடுக்கிறோம். அதில் 11 கோடியே 53 லட்சத்தி 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் இன்று வழங்க உள்ளோம். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வருகிற எட்டாம் தேதி ஈரோட்டில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வில் பங்கு பெறுகிறார்.

அதே போன்று வருகின்ற 11ஆம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வர உள்ளார். கோவையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழா இருந்தாலும் மிக விரைவாக திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு மருத்துவமனை கட்டிடங்கள் மிக விரைவாக திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

இலவச மடிக்கணினி குறித்தான பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விஜய் அரசியலுக்கு வந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, புதுசா வருபவர்களுக்கு வாழ்த்து சொல்வது தான் மரியாதை. நாங்கள் விஜய் தொடங்கிய கட்சிக்கு வாழ்த்துக்கள் சொல்கிறோம். திமுகவை பற்றி மக்களுக்கு தெரியும். திமுக தனித்துவமான கட்சி. நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தொடர்ச்சியாக செய்து வரும் தேர்தலுக்கு என்று தனியாக நாங்கள் வேலை செய்யவில்லை.

அரசு இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி திமுக தொடர்ச்சியாக மக்களுக்கு பணி செய்து வருகிறது. அந்த வகையில் தான் இப்போதும் பணி செய்து வருகிறோம். தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு நாங்கள் பணி செய்வதில்லை. மக்களை நோக்கி எப்போதும் பணி செய்வோம். நாம் தமிழர் கட்சி மீது வெறுப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை செய்தால் அது தவறு. ஆனால் அதைப் பற்றி நாங்கள் இப்போது கருத்து சொல்வது சரியில்லை. மதுபானம் விலை உயர்வு குறித்து இப்போது பேசுவது சரியில்லை என்றார்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex Mla, வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...