மதுக்கரை நகராட்சி குப்பைகள் கல்குவாரியில் எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு - பொது மக்கள் புகார்

27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், 23 ஆவது வார்டு சல்காரா ஹோட்டல் பின்புறமுள்ள பயன்பாடற்ற கல் குவாரியில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 13 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகின்றன. ஒரு டன் குப்பைக்கு 5565 ரூபாய் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி மூலம் வழங்கப்படுகிறது.


கோவை: மதுக்கரை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, 23 ஆவது வார்டு சல்காரா ஹோட்டல் பின்புறமுள்ள பயன்பாடற்ற கல் குவாரியில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 13 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகின்றன. ஒரு டன் குப்பைக்கு 5565 ரூபாய் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி மூலம் வழங்கப்படுகிறது.

23 ஆவது வார்டில் ராஜேஸ்வரி நகர், ஸ்ரீ என்கிளேவ், பாலு என்கிளேவ், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1500 பேர் வசித்து வருகின்றனர். சாலையோரம் கொட்டப்படும் குப்பையில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தீ வைப்பதால், தீ கொளுந்து விட்டு எரிகின்றன. இதனால் காற்றுமாசு அடைகிறது. மூச்சு திணறல், சுவாச கோளாறுகள் இரவு நேர தூக்கம் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் தீயணைப்பு துறையின் உதவியை நாட வேண்டிய அவசியம் உள்ளது.

குப்பைகளை எரிப்பதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதோடு நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. பொதுமக்கள் வேறு வழியில்லாமல் அதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.



அது சம்மந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் செவி சாய்க்காமல் கண்டு காணாமல் இருந்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...