பில்லூர் 3-வது கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் விநியோகம் வரும் 11-ல் தொடக்கம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற 11ஆம் தேதி பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று (பிப்.6) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை மாநகரில் 2035ஆம் ஆண்டுக்கான மக்கள் தேவையை கருத்தில் கொண்டு தட்டுப்பாடற்ற குடிநீர் விநியோகத்திற்கான ரூபாய்.779 கோடி மதிப்பில் பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டம் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பவானியாற்றை நீராதாரமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பில்லூர் 3வது திட்டத்துக்காக முருகையன் பரிசல் துறை பகுதியில் ரூபாய் 134 கோடி மதிப்பில் தலைமை நீரேற்று நிலையம் கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூருக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. தண்டிப்பெருமாள் புரத்தில் ரூபாய் 104. 90 கோடி மதிப்பில் 178 எம் எல் டி திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இங்கிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் கட்டன் மலைக்கு தண்ணீர் செல்கிறது. அங்கு 900 மீட்டர் தூரத்துக்கு சுங்கம் அமைக்கப்பட்டு பன்னிமடைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தில் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகிற 11ஆம் தேதி பில்லூர் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...