அதிமுக - பாஜக இடையே ரகசிய உறவு தொடர்கிறது - கோவை புதூரில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேட்டி

அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற வேண்டுமென அமைச்சர் செந்தில் பாலாஜியை வேண்டுமென்றே சிறையில் வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.


கோவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக விளையாட்டு அணி சார்பில் பரிசளிப்பு விழா கோவை புதூர் பகுதியில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராவ பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளையும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி எதை செய்தாலும் மிகச்சிறப்பாக செய்வார். அவருடைய சிஷ்யனான கோவை வடக்கு மாவட்ட தலைவர் ரவி அதே அளவிற்கு விழாவை சிறப்பாக செய்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை வேண்டுமென்றே சிறையில் வைத்துள்ளனர். அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற வேண்டுமென சிறையில் வைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி குறை சொல்லவில்லை.

இதுநாள் வரைக்கும் பாஜகவுடன் தான் கூட்டணியில் இருந்தீங்க, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்றத்தில் வாயை திறந்துள்ளீர்களா? ஒரு கேள்வி கேட்டுள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார். ஆனால் பொள்ளாச்சி எம்.பி 240 கேள்விகளை கேட்டுள்ளார். திமுக பாராளுமன்றத்தில் சென்றவுடன் தலைகீழாக உள்ளது. அந்த அளவிற்கு கேள்விகளை தமிழ்நாட்டிற்கு கேட்டுள்ளோம்.

உலக முதலீட்டார்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். உதயநிதி விளையாட்டு துறை அமைச்சர் ஆனவுடன் உலகரங்கில் நடைபெறும் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தினார். செஸ், கேலோ இந்தியா போட்டிகள் மாவட்டம் வாரியாக நடத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு பதக்க பட்டியலில் இந்திய அளவில் 2வது இடத்திற்கு வந்துள்ளது. நாம் அனைவரும் சமம், நாம் யாருக்கும் எதிரி இல்லை. பிறப்பால் அனைவரும் சமம்.

பாஜக கடந்த 10 ஆண்டுகளில் மதவெறி அரசியலை கையாண்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மதவெறி கலச்சாரம் நடக்காது. .நாம் கட்டும் வரி பணத்தை நமக்கு முழுமையாக ஒன்றிய அரசு கொடுப்பது இல்லை.

பால், வெண்ணை என எது வாங்கினாலும் வரி கட்டனும் , நாம் ஒரு ருபாய் கொடுத்தால் 29 பைசா தான் மத்திய அரசு கொடுக்கிறது. ஆனால் உ.பி மாநிலம் கொடுக்கும் 1 ரூபாய்க்கு 2 ரூபாய் 17 பைசா கொடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு எதிரானவர்கள் பாஜக. அதற்கு துணை போனவர்கள் அதிமுக. செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தார்கள்.

கூட்டணியை விட்டு வெளியே வந்த பின்னும் எடப்பாடி பழனிசாமி மீதும் எஸ்.பி.வேலுமணி மீதும் ஏன் இன்னும் வருமானவரி, அமலாக்கதுறை சோதனை செய்ய வில்லை.அவர்கள் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில் நாங்கள் வெளியே வந்தது மாதிரி நடிக்கிறோம். நீங்களும் அப்படியே நடியுங்கள் என இரு கட்சிகளிடையே ரகசிய உறவை வைத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...