வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு கால் வயிறுதான் நிரம்பியுள்ளது - கோவையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி பேட்டி

தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது குறித்த அறிவிப்பு வேளாண் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் வேளாண் பட்ஜெட் குறித்து கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் விடுபட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.

மேலும் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் உயிர்சேதம் ஆகியவற்றிக்கு நிதி ஒதுக்கீடு இடம் பெறவில்லை என கூறிய அவர், வேளாண் தொடர்பான பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக விவசாயிகள் தொடர்பானவர்களிடம் ஆலோசணை நடத்தியிருந்தால் ஒட்டு மொத்த விவசாயிகளுக்கு பயனுள்ள பட்ஜெட்டாக அமையும் என தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவிலேயே வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் போட்டது தமிழக அரசுதான் தான் என்று கூறிய அவர், அதனை தாம் எப்போதும் வரவேற்பதாக தெரிவித்தார். தென்னை தொடர்பான விவசாயித்திற்கு அறிவித்துள்ள 36 கோடி குறைவாக இருப்பதாக கூறிய அவர், மற்ற சில ஒதுக்கீடுகளை வரவேற்பதாகவும், மண் புழு உரம் தயாரிக்க உழவர் சந்தை மேம்பாட்டுக்கு அறிவிப்பு, பசுந்தீவன உரத்திற்கு ஒதுக்கியுள்ள நிதி போன்ற அறிவிப்புகள் வரவேற்பை பெற்றிருந்தாலும் கரும்புக்கு ஒரு கிலோவிற்கு 250 ரூபாய் வீதம் ஒரு டன்னுக்கு 250 கோடி ஒதுக்கீடோடு முடித்துள்ளதாக கூறிய அவர், மொத்தத்தில் இந்த பட்ஜெட் அறிவிப்பு விவசாயிகளுக்கு கால் வயிறுதான் நி்ரம்பி உள்ளதாகவும், முக்கால் வயிறு காலியாகத்தான் இருப்பதாக வேதனை தெரிவித்த அவர், தமிழக அரசு அறிவித்துள்ள வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு போதுமான பட்ஜெட்டாக இல்லை என தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...