கோவையில் இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பதிலாக கப்ரஸ்தான் பயன்பாட்டுக்கான இரண்டு ஏக்கர் நிலம் ஒப்படைப்பு

கோவையில் சாய்பாபாகாலனி, வடகோவை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கப்ரஸ்தான் பயன்பாட்டுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒப்படைக்கப்பட்டது.


Coimbatore: கோவையில் சாய்பாபாகாலனி, வடகோவை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த கப்ரஸ்தான் பயன்பாட்டுக்கான இரண்டு ஏக்கர் நிலம், தமிழக அரசு மூலமாக ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



இந்த நில ஒதுக்கீடு, சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உடனடி முயற்சியால் சாத்தியமாகியுள்ளது. சங்கனூர் பகுதியில் உள்ள இந்த இரண்டு ஏக்கர் நிலம் தற்போது ஜமாத் நிர்வாகிகளுக்கு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. நில ஒப்படைப்பு நிகழ்ச்சி கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் சந்தியா, கோவை மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் ஹைதர் அலி, அனைத்து ஜமாத் பொதுச் செயலாளர் முகமது அலி மற்றும் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி ஆகியோரிடம் நடைபெற்றது. பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி, இந்த கோரிக்கை சுமார் முப்பது ஆண்டுகள் காலமாக இருந்ததாகவும், இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோருக்கு அனைத்து ஜமாத் சார்பாக நன்றிகளை தெரிவித்ததாகவும் கூறினார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட முஸ்லிம் ஜமாத் மற்ற ும் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர், பல் சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாஹிர் வழக்கறிஞர் முகமது இஸ்மாயில், பாபுலால் ஏர்டெல் அபுதாஹிர், மனிதநேய மக்கள் கட்சி அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட் மூலம் நலிவுற்றவர்களின் வாழ்க்கை ஏற்றம் பெறும் வகையில் இருப்பதாகவும், கோவையில் டைடல் பூங்கா மற்றும் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் மகிழ்ச்சியை தருவதாகவும் தலைவர் முகம்மது ரபி கூறினார். இந்த நில ஒப்படைப்பு நிகழ்ச்சி மூலம் சுமார் முப்பது ஆண்டுகால இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவர்களின் சமூகத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...