கோவையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 2.5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கோவையில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வந்ததையடுத்து பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இன்று ஆர்.ஜி.தெரு, தாமஸ் தெரு உள்ளிட்ட நான்கு பகுதிகளில் குட்கா பொருட்கள் அதிகளவில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குட்கா, பான்மசாலா அதிகளவில் பதுக்கிவைத்திருப்பது கண்டறியப்பட்டது.



இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது கோவையில் பிடிபட்டுள்ள சுமார் 2.5 டன் எடையுள்ள இந்த புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாகவும் பொள்ளாச்சி உள்ளிட்ட கோவை மாநகரத்தில் புறநகர் பகுதிகளில் இருந்தும் இதுபோன்ற புகையிலைப் பொருட்கள் கோவைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுகிறது. 

கடந்த காலங்களில் புகையிலைப் பொருட்கள் கடத்தியவர்களே தற்போதும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குற்றச் செயலில் ஈடுபட்டுவருவோரை தொடர்ந்து தேடி வருகிறோம். 



மேலும், பேருந்துகள் மூலம் புகையிலைப் பொருட்கள் கடத்துவதை தவிர்க்க வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள், ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களிடமும் இதுகுறித்து அறிவுரை வழங்கியுள்ளோம்" என தெரிவித்தார்

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...