கோவை குற்றாலம் அருகே சாடிவயல் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்

சாடிவயல் பகுதியில் இன்று அதிகாலையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளது. இந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் கோவை குற்றாலம் அருகே அமைந்துள்ள சாடிவயல் பகுதியில் இன்று (31.05.2024) அதிகாலையில்ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த காட்டு யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது யானை சாடிவயல் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் தனியாக காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் வனத்துறையினருடன், பொதுமக்களும் இணைந்து காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...