கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாராபுரம் நகராட்சியில் இணைக்க கூடாது என பொதுமக்கள் மனு

தாராபுரம் தாலுகாவில் ஜமாபந்தியில், கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாராபுரம் நகராட்சியில் இணைக்க வேண்டும் என்ற முடிவுக்கு எதிராக பொதுமக்கள் மனு அளித்தனர். ஆர்.டி.ஒ செந்தில் அரசன் பார்வைக்கு அனுப்பினார்.



திருப்பூர்: தாராபுரம் தாலுகாவில் ஜமாபந்தி ஆர்டிஓ செந்தில் அரசன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். தாராபுரம் உள் வட்டத்தை சேர்ந்த 9 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டாமாறுதல், ஓஏபி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 220 மனுக்கள் அளிக்கப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஒ கூறினார்.



தாராபுரம் கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்தைசேர்ந்த 9 வார்டுகளிலிருந்து பெண்கள் உள்பட சுமார் 200 பேர் தாராபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



பின்னர் ஆர்டிஓவிடம் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது, கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாராபுரம் நகராட்சியுடன் இணைப்பத என்ற முடிவு எடுக்க உள்ளதாக அறிந்தோம்.

100 நாள் வேலை திட்டத்தில் தற்போது 2 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறோம். நகராட்சியுடன் இணைத்தால் வேலை வாய்ப்பை இழப்பதுடன் வாழ்வாதாரம் பாதிக்கும்.

மேலும வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் எங்களுக்கு நகராட்சியில் வசூலிக்கப்படும் சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை செலுத்த இயலாது. எனவே இவ்முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது மனுவை பெற்றுக்கொண்டார். ஆர்.டி.ஓ செந்தில் அரசன் தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...