பொள்ளாச்சி அருகே சாலையில் நீதிபதி மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே சின்னம்பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி (58) மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நீதிபதி உயிரிழந்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே சின்னம்பாளையம் பகுதியில் வசித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி கருணாநிதி (58) இன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மளிகை கடைக்கு தனது காரில் வந்து இறங்கிய நீதிபதி கருணாநிதி, சாலையை கடக்க முயன்றபோது, உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இந்த மோதலில் பலத்த காயமடைந்த நீதிபதி கருணாநிதியை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நீதிபதி கருணாநிதி உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றது.



சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, நீதிபதி மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...