பிஎஸ்ஜி கல்வி நிறுவன பிஜிடிஎம் துறை சார்பில் திருநங்கைகளுக்கு கைவினைப் பொருட்கள் பயிற்சிப் பட்டறை

கோவையில் செயல்பட்டு வரும் பிஎஸ்ஜி கல்வி மேலாண்மை நிறுவனத்தின் பிஜிடிஎம் துறை சார்பில் திருநங்கைகளுக்கான கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருநங்கைகள் 20 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு பொது மருத்துவமனை மேற்பார்வையாளர் மற்றும் ஐகான் ஆஃப் கோயமுத்தூர், ஸ்வச் பாரத் விருது பெற்ற திருநங்கை தஷ்லிமா நஷ்ரிம் பங்கேற்றார். மேலும், பிஎஸ்ஜி மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் நந்தகோபால், பேராசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் தஷ்லிமா நஷ்ரிம் பேசுகையில், திருநங்கைகள் தங்களது வாழ்வில் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பிஎஸ்ஜி குழுமம் தான் முதல்முறையாக "ஹிஜிரா" என்ற நிகழ்ச்சியை திருநங்கைகளுக்காக நடத்தியது. அந்த நிகழ்ச்சி திருநங்கைகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதன் மூலமே 48 சதவிகித திருநங்கைகள் பணிக்குச் சென்று தங்களது வாழ்வை மேம்பாட்டுடன் நடத்தி வருகின்றனர். எங்களுக்கு இவ்வாறான நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியதில் மாணவர்களின் பங்கு மிகவும் வாழ்த்துக்குறியது" என்றார்.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் வளையல், காதணி உள்ளிட்ட கைவினை அழங்காரப் பொருட்கள் செய்தல் மற்றும் மெகந்தி வரைதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...