அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வழங்கிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வழங்கிடக்கோரி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அம்மனுவில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இன்று முதல் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 2 முதல் 5 வயதுவரை உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது சிறார்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்புள்ளன. கோடை விடுமுறை என்பதே குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடி மகிழ அளிக்கப்படும் விடுமுறை காலம். எனவே, அங்கண்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளித்திட அரசு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...