வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

கோவையில் வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் செயல்பாடுகளை எமர்ஜென்சி காலத்துடன் ஒப்பிட்டுள்ளார்.



கோவை: கோவை டவுன் ஹாலில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் கலவரங்களை கண்டித்து போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை அவர் விமர்சித்தார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடப்பதாகவும், அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி தவிப்பதாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டின் எல்லையில் காத்திருப்பதாகவும், பெண்களும் குழந்தைகளும் பலவந்தமாக தாக்கப்படுவது உலகளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மதத்தின் பெயரால் வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு இதில் தலையிட்டு வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்காக இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாகவும் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

"தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அழக்கூட உரிமை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கின்ற தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்," என்று அவர் கூறினார். நீதிமன்றத்தை நாடி ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை இந்து முன்னணி பெற்றுக்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

சுதந்திர தின ஊர்வலங்களுக்கு கூட தமிழகத்தில் தடை விதிப்பது நியாயமற்றது என்றும், ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை தடை செய்வது ஏற்புடையதல்ல என்றும் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். மேலும், திமுக அரசு எமர்ஜென்சி காலத்தைப் போல நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

"திமுக அரசாங்கத்திற்கும் மற்றும் காவல்துறையினருக்கும் கடவுள் தான் புத்தி கொடுக்க வேண்டும்," என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது உரையை முடித்தார்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...