கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 54 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 54 மனுக்கள் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் இன்று (13.08.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் IAS மற்றும் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 54 கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். இம்மனுக்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கியிருந்தன.



பெறப்பட்ட மனுக்களின் விவரம் பின்வருமாறு:

- கிழக்கு மண்டலம்: 7 மனுக்கள்

- மேற்கு மண்டலம்: 9 மனுக்கள்

- வடக்கு மண்டலம்: 9 மனுக்கள்

- தெற்கு மண்டலம்: 6 மனுக்கள்

- மத்திய மண்டலம்: 15 மனுக்கள்

- பிரதான அலுவலகம்: 8 மனுக்கள்



மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்திற்கு முன்னதாக, மத்திய மண்டலம் வார்டு எண் 48-க்குட்பட்ட காந்திபுரம், பி.கே.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் குடிநீர் வரி, முகவரி மாற்றம் தொடர்பான கோரிக்கை மனுவின் மீது உடனடி நடவடிக்கையாக முகவரி மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணையை மேயர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாநகர நல அலுவலர் (பொ) மரு.கே.பூபதி, நகரமைப்பு அலுவலர் குமார், உதவி ஆணையர்கள் செந்தில்குமரன் (மத்தியம்), முத்துசாமி (கிழக்கு), இளங்கோவன் (தெற்கு) (பொ), சந்தியா (மேற்கு), ஸ்ரீதேவி (வடக்கு), மோகனசுந்தரி (நிர்வாகம்), உஷாராணி (கணக்குகள்) உள்ளிட்ட மாநகராட்சி அனைத்து அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...