கோவை மாநகராட்சி பெண் ஊழியருக்கு லஞ்சம் வாங்கியதற்காக ஓராண்டு சிறை தண்டனை

கோவை மாநகராட்சியின் முன்னாள் வரி வசூலிப்பாளர் வசந்தகுமாரி, சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.7,000 லஞ்சம் கேட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.


கோவை: கோவை மாநகராட்சியின் முன்னாள் வரி வசூலிப்பாளர் வசந்தகுமாரி, சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் கேட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். கோவை ஊழல் தடுப்பு சட்டங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

2014 ஆம் ஆண்டில், கோவை சலீவன் வீதி காந்திபூங்கா பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரவேல் என்பவர் நிலம் வாங்கினார். அந்த நிலத்தின் சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 20-வது வார்டில் அப்போது வரி வசூலிப்பாளராக பணிபுரிந்து வந்த வசந்தகுமாரியை அணுகினார்.

சொத்துவரியில் பெயரை மாற்றுவதற்கு வசந்தகுமாரி ரூ.7,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்துகுமரவேல், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வசந்தகுமாரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்பு சட்டங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மோகனாரம்யா, வரி வசூலிப்பாளர் வசந்தகுமாரிக்கு ஓராண்டு சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து ஆகஸ்ட் 30 அன்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு, அரசு ஊழியர்கள் மத்தியில் லஞ்சம் வாங்கும் பழக்கத்தை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...