மேட்டுப்பாளையம் அருகே கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை முயற்சி

மேட்டுப்பாளையம் அருகே அறிவொளி நகரில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிறுமுகை வனச்சரக பகுதியான சென்னா மலை கரடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், மலை அடிவார பகுதியான அறிவொளி நகர் பகுதியில் பொதுமக்கள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அடிக்கடி வேட்டையாடுவதால், மனிதர்களை தாக்கும் முன் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், சிறுமுகை வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். அறிவொளி நகர் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கூண்டில் நாய்களை வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த முயற்சி வெற்றி பெற்றால், அப்பகுதி மக்களின் அச்சம் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வனத்துறையினரின் இந்த நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...