சூலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு; தாளியூரில் புதிய சுகாதார மையம் திறப்பு

கோயம்புத்தூர்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் சூலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தாளியூரில் ரூ.58.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.


Coimbatore: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்தபோது, இன்று அதிகாலை திடீரென சூலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு வந்திருந்த புறநோயாளிகளையும், உள்நோயாளிகளையும் நேரில் சந்தித்த அமைச்சர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்து விசாரித்தார். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதனை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தார்.



இந்த ஆய்வின் போது, கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், தலைமை மருத்துவர் வாணி ரங்கராஜன், மருத்துவர் கஜேந்திரன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

அதே நாளில், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் தாளியூரில், ரூ.58.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், ஒன்றிய கழக செயலாளர் CMK.குமார் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...