போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா நாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சலுகை விலையில் கிடைக்கும் சுற்றுலா பேக்கேஜ்கள் இதற்கு முக்கிய காரணம்.


Coimbatore: கோடைகால விடுமுறையையொட்டி கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளை தவிர்த்து தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கி கோவை மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 32 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. தினமும் 10,000 பேர் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.


விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "கோடைகால விடுமுறையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து தினமும் அதிகரித்து காணப்படுகிறது. ஈரான்-இஸ்ரேல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் இடையே நடக்கும் போர் காரணமாக வளைகுடா நாடுகள் வழியாக செல்வதை பெரும்பாலான பயணிகள் தவிர்த்து விட்டனர்" என்றனர்.


இதற்கு மாறாக கோவையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், பாங்காக் போன்ற நாடுகளுக்கு கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர் தொடர்ந்து சென்று வருகின்றனர். முன்பு வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்பது மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற நிலை காணப்பட்டது.


தற்போது பல தரப்பு மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் சலுகை விலையில் சுற்றுலா பேக்கேஜ் பல்வேறு வெளிநாடுகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலிருந்து சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை தொடரும் காரணத்தால் கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் காணப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...