விஜயா வங்கியின் வளர்ச்சி உயர்ந்துள்ளதாக மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி பேட்டி

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விஜயா வங்கியின் வளர்ச்சி உயர்ந்துள்ளதாகவும், வராகடன் சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி பேட்டி அளித்துள்ளார்.

விஜயா வங்கியின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி இன்று அவிநாசி சாலையில் உள்ள விஜயா வங்கி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், வங்கியின் வளர்ச்சியில் வீட்டுக் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது.

தற்போது புதிதாக 168 கிளைகள் திறக்கபட்டுள்ளது. மேலும் கிளைகள் துவக்க வங்கி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. பனியன் உற்பத்தியாளர்கள் அதிகம் உள்ள திருப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் பலன் பெறும் வகையில் கிளைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாய கடன்களைப் பொருத்த வரையில் பண தேவைக்காக அதிக வட்டியில் வெளியாட்களிடம் கடன் பெற்றவர்களுக்கு பத்திரத்தை மீட்டு 8 சதவிகிதம் மற்றும் 9 சதவிகிதம் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன்கள் விஜயா வங்கி வழங்குகிறது. மேலும் வங்கி தொழில்துறையினர், கல்வி கடன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தபடுகிறது. கடந்த சில மாதங்களில் வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...