சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர் ஹரி சங்கர் (28) உயிரிழந்தார். காரில் பயணித்த இரண்டு இளைஞர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் காரில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அன்னூர் பகுதியை சேர்ந்த ஹரி சங்கர் (28) என்பதும், Driver ஆக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.



தற்போது அந்த விபத்தில் CCTV காட்சிகளும் வெளியாகி உள்ள நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர் ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தமிழரசனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்த முழுமையான விவரங்களை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.




இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை சீர்செய்தனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...