கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார், சில மணி நேரங்களிலேயே சேலத்தில் கைது செய்யப்பட்டு கோவை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார், சேலம் மாவட்டம் மேச்சேரியில் கைது செய்யப்பட்டார். அவரை சேலம் மேச்சேரி ரோந்து போலீசார் பிடித்து, கோவையில் இருந்து சென்ற தனிப்படை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிம்முடு அஜித்குமார், கார் விற்பனை தொடர்பான தகவல்களை சேகரித்து, அவற்றை தனது கார் என்பதுபோல் OLX செயலியில் பதிவேற்றி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் முன்பணமாக பணம் பெற்று மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆந்திராவில் கைது செய்யப்பட்டபோது உடல்நலக்குறைவு இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்தும் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் தமிழகத்திற்கு வந்த அவர், திருப்பூர் மாவட்டத்தில் இதேபோன்ற முறையில் இருவரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபோது உடல்நலக்குறைவு இருப்பதாக தெரிவித்ததால், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை அங்கிருந்து தப்பியோடிய அவர் குறித்து பந்தயசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய அதே பாணியில் தமிழக போலீசாரையும் ஏமாற்றி தப்பிய நிலையில், உடனடியாக கட்டுப்பாட்டு அறை மூலம் அருகிலுள்ள மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனிப்படை அமைத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் சேலம் நோக்கி சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இன்று அதிகாலை பிம்முடு அஜித்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை தனிப்படை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய சில மணி நேரங்களிலேயே பிரபல மோசடி பேர்வழியான பிம்முடு அஜித்குமார் மீண்டும் போலீசாரிடம் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...