கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Coimbatore: கோவை மதுக்கரை தாலுக்கா பகுதியில் உள்ள கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 15) மேற்கொள்ளப்பட உள்ளதால், பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் பிற மின் உபகரணங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடனேயே மின் விநியோகம் மீண்டும் தொடங்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களின் அன்றாட பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளவும், இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மின்வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Newsletter

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...