கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.


Coimbatore: கோவை வடவள்ளி கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




கோவை, வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு, பிரபா நகர், அஷித்ரா அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி (வயது 38). இவர் கஜேந்திரனின் மனைவி. பாக்கியலட்சுமியின் பெற்றோர் வடவள்ளி கல்வீரம்பாளையம், S.P.K நகர் பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.




கடந்த 11-ஆம் தேதி பாக்கியலட்சுமியின் பெற்றோர் ராஜபாளையத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். வீட்டைப் பராமரிப்பதற்காக பாக்கியலட்சுமி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து சுத்தம் செய்து விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படி, கடந்த 28-ஆம் தேதி பிற்பகல் வீட்டிற்கு வந்து சுத்தம் செய்து விட்டு பூட்டிச் சென்றார்.




நேற்று முன்தினம் பாக்கியலட்சுமி மீண்டும் வீட்டைப் பார்க்க வந்தபோது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது.




லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 1½ சவரன் தங்க தோடு, 1 சவரன் எடைகொண்ட 4 ஜோடி சிறிய தோடுகள், ¾ சவரன் பவள தோடு, 2 சவரன் தங்க வளையல்கள், 1 சவரன் தங்க நாணயம், 1 சவரன் மூக்குத்தி என மொத்தம் 4¾ சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மேலும் 1 வெள்ளி கொடி, 4 வெள்ளி தண்டைகள் மற்றும் 3 வெள்ளி குத்துவிளக்குகள் ஆகியவையும் திருடப்பட்டிருந்தன.




யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றது உறுதியானது. இது குறித்து பாக்கியலட்சுமி வடவள்ளி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




அத்துடன் அப்பகுதியில் உள்ள CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வெறிச்சோடிக் கிடக்கும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடப்பதால், வீட்டை விட்டு வெளியூர் செல்பவர்கள் அண்டை வீட்டாரிடம் தெரிவித்துச் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...

Coimbatore Police Introduce Family Liaison Officers to Assist Crime Victims

Coimbatore City Police have introduced the Family Liaison Police Officer (FLPO) system to ensure continuous communicatio...

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...