இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் என்பவரை பல்லடம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்று அதிகாலையில் வீடு புகுந்து தாய் மற்றும் மகள் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல் விவகார எதிர்ப்பு காரணமாக நடைபெற்றதாக கூறப்படும் இக்கொலை தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் என்ற நபரை பல்லடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் தனது மனைவி தனலட்சுமி மற்றும் மகள் பூவரசியுடன் வசித்து வந்துள்ளார். பழனிச்சாமியும் தனலட்சுமியும் பனியன் கம்பெனியில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்த நிலையில், அவர்களது மகள் பூவரசி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை பழனிச்சாமி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனலட்சுமியும் பூவரசியும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் திடீரென புகுந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த தனலட்சுமியும் பூவரசியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சம்பவத்திற்குப் பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபரை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, போலீசாரிடம் சம்பவம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.

பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த நபரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் என்பது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் பூவரசி மற்றும் அக்ஷய் பழகி வந்தது தொடர்பாக தாய் எதிர்ப்பு தெரிவித்து, தனது மகளை கண்டித்ததாகவும்

இதையடுத்து பூவரசி தனது காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அக்ஷய், சம்பவத்தன்று காலை பூவரசியின் வீட்டிற்குச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூவரசியையும் அவரது தாய் தனலட்சுமியையும் வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்ஷயை கைது செய்த பல்லடம் போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அரிவாளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டிற்குள் புகுந்து தாய் மற்றும் மகளை காதலனே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பச்சாபாளையம் மற்றும் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தின் பின்னணி உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...