சரவணம்பட்டியில் லாரி டிரைவர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

கோவை சரவணம்பட்டி விநாயகாபுரம் இளங்கோ பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் டிரைவர் ராஜு (53) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை சரவணம்பட்டியில் மினி லாரி ஒன்றின் உள்ளே டிரைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை கீழக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜு (வயது 53). இவர் தற்போது கோவை சரவணம்பட்டி சிவராம் நகர் ஆடி வீதியில் தங்கி, சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு மது அருந்தும் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.




இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற ராஜு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சரவணம்பட்டி விநாயகாபுரம் இளங்கோ பள்ளி அருகே அவரது மினி லாரி நீண்ட நேரமாக கேட்பாரற்றுக் கிடப்பதாக, அவ்வழியாகச் சென்றவர்கள் அவரது மகன் அன்பரசனுக்கு (23) செல்போனில் தகவல் தெரிவித்தனர்.




தகவல் அறிந்த அன்பரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, லாரியின் டிரைவர் இருக்கையில் அவரது தந்தை ராஜு அசைவற்று கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்தார். வந்த மருத்துவ குழுவினர் பரிசோதித்ததில் ராஜு ஏற்கனவே உயிரிழந்து விட்டது உறுதியானது.




தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சரவணம்பட்டி போலீசார் ராஜுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜு எவ்வாறு உயிரிழந்தார், மர்ம மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...