சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது பிக்கப் வேன், லாரி மோதியது, இருசக்கர வாகனங்கள் மோதியது உள்ளிட்ட விபத்துகள் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை மாநகரில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது பிக்கப் வேன் மற்றும் லாரி மோதியது, இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது, சாலையைக் கடந்த மூதாட்டி மீது ஸ்கூட்டர் மோதியது உள்ளிட்ட சம்பவங்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உப்பிலிபாளையம் என்.ஜி.ஆர். வீதியைச் சேர்ந்த சீனிவாசன் (58), தனது பைக்கில் திருச்சி ரோடு ஒலிம்பஸ் பேருந்து நிறுத்தம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது பாப்பிரெட்டியைச் சேர்ந்த பாப்பிரெட்டி (24) ஓட்டி வந்த பொலிரோ பிக்கப் வேன், பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சீனிவாசனின் வலது முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (47), தனது மனைவி ரம்யா (41) உடன் ஸ்கூட்டரில் நல்லாம்பாளையம் கண்ணப்பன் நகர் வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரூபன் (20) ஓட்டி வந்த பைக், அவர்களது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பிரசாந்துக்கு முகத்திலும், ரம்யாவுக்கு இடது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெள்ளக்கிணறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த அண்ணாமலை (64), செக்போஸ்ட் ரோடு அருகே பைக்கில் சென்றபோது, தேவா (23) ஓட்டி வந்த பிக்கப் வாகனம் அவர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அண்ணாமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகன் அளித்த புகாரின் பேரில் மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோடு சந்திப்பு அருகே கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (28) பைக்கில் சென்றபோது, கே.கே. புதூரைச் சேர்ந்த அரவிந்த்குமார் (25) ஓட்டி வந்த ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து அவரது பைக் மீது மோதியது. இதில் ஹரிஹரனின் இடது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுந்தராபுரத்தைச் சேர்ந்த அய்யம்மாள் (71), குறிச்சி அரசு பள்ளி எதிரே பொள்ளாச்சி மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது, தண்டாயுதபாணி (46) ஓட்டி வந்த ஸ்கூட்டர் அவர் மீது மோதியது. இதில் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட அய்யம்மாள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மகள் அளித்த புகாரின் பேரில் மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுந்தராபுரம் அழகு நகரைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் (41), எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்றபோது, ஆறுமுகம் (52) ஓட்டி வந்த ஐச்சர் லாரி அவரது பைக் மீது மோதியது. இதில் அப்துல் ஹக்கீமின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...