மாநகராட்சி ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மண்டல உதவி ஆணையர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் மண்டல சுகாதார அலுவலர்களைக் கொண்டு கட்டுமான தளங்கள் மற்றும் காலியாக உள்ள தளங்களை ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சியில், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 28 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக திருச்சி ரோடு, ஏர்போர்ட் ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு, அவிநாசி ரோடு பகுதிகளில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல், தேவையான இடங்களில் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்துதல் மற்றும் தேவையற்ற பொருட்களை (பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், பிளாஸ்டிக் கப்புகள்;) உடனடியாக அப்புறப்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.8000 அபராதம் விதிக்கப்பட்டது.

வடக்கு மண்டலத்தில், 4, 27, 41, 29 மற்றும் 55 வார்டுக்குட்பட்ட 25 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக விஸ்வநாதபுரம், முருகன் நகர், சின்னவேடம்பட்டி, மணியம் நகர், எம்.ஜி.ஆர் நகர் இரத்தினபுரி ஆகிய பகுதியில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட 42 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக பி.எம்.சாமி காலனி, ராம் நகர், புளியகுளம், கெம்பட்டி காலனி போன்ற பகுதிகளில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, டெங்கு கொசு ஒழிப்பதற்கு தேவையான தடுப்பு முறைகளை உபயோகப்படுத்தினர். இந்த மண்டலத்தில் முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.2500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 32 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக பாரதி பார்க், எஸ்.பி.காலனி, அழகேசன் ரோடு, ஜெயலட்சுமி நகர், வெங்கிடகிருஷ்ணா ரோடு, மணியம் காளியப்பன் வீதி போன்ற பகுதிகளில் கட்டுமான தளங்கள் ஆய்வு செய்து, டெங்கு கொசு ஒழிப்பதற்கு தேவையான தடுப்பு முறைகளை உபயோகப்படுத்தினர். மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.6500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தெற்கு மண்டலத்தில் 89-வது வார்டுக்குட்பட்ட மருதம் நகரில் டெங்கு கொசு ஒழிப்புக்கு தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...