உள்ளாட்சியில் இளைஞர்கள் பங்களிக்கும் வகையில் சிறப்புப்பணியாற்றும் "இளையதலைமுறை"

கோவை, சோளிங்கர், அள்ளியூர், சென்னை, காஞ்சிபுரம், மேலூர், சமயநல்லூர், சிவகாசி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 9 பகுதிகளில் இருந்து பொதுநலமிக்க இளைஞர்களை ஒன்றுதிரட்டி பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையிலும், உள்ளாட்சியில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் "இளையதலைமுறை" என்னும் அமைப்பு துவங்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.



இக்குழுவினரின் சார்பாக கடந்த 6 மாதங்களாக சோளிங்கர் இளையதலைமுறை சார்பாக மரம் நடுதல் பணி, பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து "நமது வாடும் நமது வீடே" நிகழ்வு துவக்கம், திருவாரூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட 6 விவசாயிகளுக்கு சுமார் 2.3 லட்சம் நிதியுதவி, காகிதபுரம் பகுதியில் இரத்த தான முகாம், மரபணு மாற்று கடுகை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி, கோவை இளையதலைமுறை சார்பாக இரத்த கொடையாளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகள் நடைபெற்றுள்ளது.

மேலும், 5 ஏழை மாணவர்களின் மேற்படிப்பிற்கு ரூ.80,000 நன்கொடை, ஏழை மாற்று திறனாளி ஒருவருக்கு மெக்கானிக் ஷாப் அமைக்க ரூ. 15,000 நன்கொடை உள்ளிட்ட நிதியுதவிகளும் அளிக்கப்பட்டுள்ளது. 



இதனைத்தொடர்ந்து, இளையதலைமுறை அனைத்து மாவட்ட உறுப்பினர்களின் நான்காம் சந்திப்பு கோவையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சியில் இளைஞர்களின் பங்கு குறித்து செந்தலை கௌதமன் மற்றும் சமூக களப்பணியில் ஊடகங்களின் பங்கு குறித்து விஸ்வா விஷ்வநாத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

அததைத்தொடர்ந்து, கடந்து 6 மாதத்தில் இளையதலைமுறை அமைப்பில் சிறப்பாக செயல்பட்ட களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் அளித்து கௌரவிக்கப்பட்டது.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...