கோவையில் குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் வீடு வாங்க இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், கோவை கோட்டத்தில் JnNURM திட்டத்தின் மூலம் வெள்ளலூர் திட்டப்பகுதியில் 2816 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகள் ஆட்சேபகராமான அரசு நிலங்களில் வசிக்கும் ஆக்கிரமிப்புதாரர்கள் உள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதிகளான ஆத்துபாலம் அணைமேடு, அண்ணா நகர் பீளமேடு, ஆட்டோ டிரைவர் காலனி, நஞ்சுண்டாபுரம் இட்டேரி, கரும்புகடை ஆகிய குடிசைப்பகுதிகளில் கோவை மாநகராட்சி மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது.

இதில் ஒரு சிலபேர் இடைத்தரகராக செயல்பட்டு வீடு வாங்கித்தருவதாக பொது மக்களிடம் ஏமாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இடைத்தரகர்களை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...