தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றுவதைக் கண்டித்து கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்

தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சுகாதார செவிலியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் பிக்மி (pregnant infant chart monitoring evaluation) முறையை மாற்றி குடும்ப பதிவேடு மற்றும் தகுதியான இணை முறையை பதிவேற்றம் செய்ய சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

இப்போது சுகாதாரத் துறை நடைமுறைப்படுத்தி உள்ள முறையால் கர்பிணி பெண்ணின் பெயர், கணவர் பெயர், முழு உடல் பரிசோதனை விபரம், குழந்தை பிறந்த விபரங்கள் உள்ளிட்டவைகளை கணினியில் பதிவேற்றம் செய்ய சுகாதார துறை உத்தரவால் செவிலியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்த முறையினை கைவிட்டு பழைய முறையையே அமல்படுத்த வேண்டுமெனவும் கிராம சுகாதார செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...