கோவை புரூக்ஃபீல்டு மாலில் பசுமை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தின் மிகவும் பிரசிதிபெற்ற புரூக்ஃபீல்டு மாலில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பசுமை விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான விநாயகர் சிலை தயாரிக்கும் போட்டிகள் நடைபெற்றது.



இதில், 6 வயது முதல் 83 வயதுவரையுடையோர் மிகவும் ஆவலுடன் பங்கேற்று இயற்கையான முறையில் விநாயகர் சிலைகளைத் தயாரித்தனர். குறிப்பாக, நீர்நிலைகளைப் பாதிக்காத வகையில் இயற்கையான பொருட்களை கொண்டு விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



பழங்கள், காய்கறிகள், கோதுமை மாவு, மஞ்சல், பேப்பர், இயற்கை நிறங்கள், களிமண் உள்ளிட்டவைகள் மூலம் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டன.



இதுகுறித்து புரூக்ஃபீல்ட்ஸ் மால் நிறுவனத்தின் மேலாளர் சுஜாதா கூறுகையில், "விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததை விட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். கடந்த 4-5 நாட்களுக்கு முன்புதான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று புரூக்ஃபீல்டு வளாகம் ஒரு திருவிழாக்கோளமாக காட்சியளிக்கிறது. கொஞ்சம் முன்பே இதுகுறித்தான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் மக்களின் பங்களிப்பு இன்னும் அதிகரித்திருக்கும் என நம்புகிறேன். இருப்பினும், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இன்று ஏராளமான மக்கள் இப்போட்டியில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மீதான மக்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். 



இப்போட்டியில், மஞ்சல் மூலம் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை முதல்பரிசை வென்றது. இதில், இயற்கை மஞ்சல் பொடி மற்றும் கூடுதல் வண்ணங்களுக்கு பீட்ரூட் சாறு, கோத்தமல்லி சாறு, கண்களுக்கு மிளகு, சீரகம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியுள்ளதாக இதன் வடிவமைப்பாளர் தெரிவித்தார்.



களிமண் மூலம் பசுமை கணபதியினை உருவாக்கிய மற்றொரு பங்கேற்பாளர் கூறுகையில், 'தற்போது நாங்கள் உருவாக்கியுள்ள விநாயகர் சிலை முழுவதும் களிமண் கொண்டு வடிவமைக்கப்பட்டது ஆகும். இந்த முறை நமது பாரம்பரிய வழிமுறையாகும். மேலும், இதன் தயாரிப்பின் போது புங்கை, வேம்பு, பீபள் உள்ளிட்ட விதைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கையினை பாதுகாக்கும் வகையில் இந்த விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.



மேலம், இந்நிகழ்வில் பங்கேற்ற பள்ளி சிறார்கள், கோதுமை மாவு மற்றும் களிமண்களைக் கொண்டும், காய்கறிகள், பழங்களைக் கொண்டும் நேர்த்தியாக விநாயர் உருவத்தினை வடிவமைத்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய செதுக்கப்பட்ட குடைமிளகாய்களால் செய்யப்பட்ட விளக்குகள் கண்டிப்பாக மதிப்புக்குரியவையாக காணப்பட்டன. மற்றும், ஒரு நேர்த்தியான தோற்றத்தை தோற்றுவித்த காகித சுருள்களால் செய்யப்பட்ட வண்ணமயமான விநாயகர் சிலை மறக்க முடியாத ஒன்றாகும்.



இயற்கையின் மீது நம்மக்கள் கொண்டுள்ள அன்பையும், அர்ப்பனிப்பையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்நிகழ்வின் இறுதியில் வெற்றிபெற்றோருக்கு பரிசுத் தொகையும், சான்றிதழும், இதில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...