பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் போராட்டம்



10-வது இருதரப்பு ஒப்பந்தம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உள்ள ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவையின் பல்வேறு இடங்களில் ஐ.டி.பி.ஐ. வங்கியானது 9 கிளைகளை நிறுவி, செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10-வது இருதரப்பு ஒப்பந்தம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் இன்று (அக்.,24) முதல் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் ஒருபகுதியாக, பாலசுந்தரம் சாலைப் பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.டி.பி.ஐ. வங்கியின் முன்பு ஊழியர்கள் 30 பேர் போராட்டம் நடத்தினர். 

போராட்டம் குறித்து கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், அனைத்து வங்கிகளிலும் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் முதல் 10-வது இருதரப்பு ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட நிலையில், ஐ.டி.பி.ஐ. வங்கி அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நிதியாண்டின் முடிவில், ரூ.5,158 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.25,205 கோடியாகும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...