உலக மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினத்தையொட்டி, புற்றுநோயிலிருந்து மீண்டோர் சந்திப்பு

கோவை, அக்டோபர் 28: நகர்ப்புற இளம் பெண்களிடையே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவது அச்சுறுத்தலாக உள்ளது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற நிலையில், இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும்.என்று ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.குகன் கூறினார்.

புற்றுநோய், மனதில் ஆறாத ரணத்தையும், தாங்காத உளைச்சலையும் ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நோயிலிருந்து மீண்டு வந்தவர்கள், மறுபிறவி எடுத்தவர்கள் என்றேக் கூறலாம். இந்த நிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் சந்தித்து பேசுவதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

அந்த நிகழ்ச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் சந்தித்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். 

இது தொடர்பாக டாக்டர் குகன் கூறியதாவது: இந்தியாவில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தோன்றிய பின் தான் 50% புற்றுநோய்கள் கண்டறியப்படுகின்றன. 2012ம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, அமெரிக்காவில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் 90%, ஆனால், இந்தியாவில் 60% மட்டுமே. இந்தியாவில், மார்பக புற்றுநோய் பற்றி பேசுவதும், விவாதிப்பதற்கும் இன்னும் தயக்கம் காட்டுகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும்.



நகர்ப்புற இளம் பெண்களிடையே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவது அச்சுறுத்தலாக உள்ளது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற நிலையில், இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும். எனவே, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில், பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன அதோடு, http://bluetoothbreastcancer.com/ என்ற இணையத்தளத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு ஒலி வடிவத்தை பதவிறக்கம் செய்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

கடந்த 2003ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக தீபம் திட்டத்தில் மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து, தீர்வுகளை அளித்துள்ளோம். இதிலிருந்து குணமடைவதையும் மேம்படுத்தியுள்ளோம். மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், தங்கள் பட்ட வேதனையையும், மனக்குமறலையும் பகிர்ந்து ஆறுதல்பட்டனர். நோயிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார். 

10 ஆண்டுகளுக்கு முன் மார்பக புற்றுநோயை கண்டறிந்து குணமாகிய பெண் ஒருவர் பேசுகையில், "புற்றுநோயை கண்டறிந்து விட்டால், வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ணிவிடக் கூடாது, நிபுணத்துவமிக்கவர்களிடம் சரியான சிகிச்சை பெற்றால், இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்," என்றார்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...