வால்பாறையில் 20 சதவிகிதம் போனஸ் வழங்கக் கோரி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை, நவம்பர் 1: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை அடுத்துள்ள சோலையார் பகுதியில் ஜெய்ஸ்ரீ தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்குச் சொந்தமாக நான்கு எஸ்டேட்டுகள் உள்ளது. இதில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்தினால் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 தினங்களுக்கு முன்பாகவே வழங்கப்படுவது வழக்கம்.



இந்த நிலையில் நடப்பாண்டுக்கான போனஸ் 8.33 சதவிகிதமாக குறைத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் போனஸ் தொகையினை வாங்க மறுத்து 20 சதவிகிதம் போனஸ் வேண்டும் என்று கடந்த அக்டோபர் 7-ம் தேதியன்று தொழிற்சாலை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தொடர் போராட்டம் நடத்தி வந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தை தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கேசவ முருகன், ஐஎன்டியுசி பிரபாகரன் மற்றும் சிஐடியு கம்யூனிஸ்ட் கட்சி ராஜன் ஆகிய தொழிற்சங்கங்களுடன் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர் கடந்த 27ம் தேதி கோவையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதிலும் உடன்பாடு ஏற்படாததால் தொழிற்சங்கத்தினர் 20 சதவிகிதம் போனஸை எஸ்டேட் நிர்வாகம் வழங்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தனர். 

இதனைத்தொடர்ந்து, மேற்கண்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து இன்று 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...