இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நவம்பர் 23

பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு, இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியிருக்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார்.அதில் ஒரு அணி வாக்காளர்களுக்கு நிறைய பணம் கொடுக்க முயற்சிப்பதாகவும் புகார்கள் வந்தததை தொடர்ந்து தேர்தல் ஆணையம் 

, இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

இது தொடர்பாக இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதேபோல, தேர்தல் ஆணையத்திலும் லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட பிரமாணபத்திரங்களை தாக்கல் செய்தனர். இரு தரப்பினரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுத்துப்பூர்வமாக முன்வைத்துள்ள நிலையில், சின்னமும், கட்சியும் தங்களுக்குத்தான் கிடைக்கும் என இரு தரப்பினரும் நம்பிக்கையுடன் கூறிவந்தனர். 

பல மாதங்களாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியிருக்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தேர்தல் ஆணையம் அறிவிப்பு பற்றிய தகவல் காரணமாக எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் பக்கம் நியாயம் உள்ளது. அதனால் தான் தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கி உள்ளது. இன்று மகிழ்ச்சியான செய்தியை தேர்தல் ஆணையம் எங்களுக்கு தெரிவித்துள்ளது. 90 சதவீதம் நிர்வாகிகள் எங்கள் பக்கம் உள்ளனர். நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி, தேர்தல் ஆணையம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. என்றார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...