”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை”

டிசம்பர் 18

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியும், மற்றவர்களும் கூறும் குற்றச்சாட்டு ஏற்க முடியாது. இதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டோம். வாக்குப்பதிவு அன்று யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் ஒப்புகை சீட்டும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்த்து இருக்கிறார்கள்.

ஆதலால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டு இருந்தன. என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...