கோவை மத்திய சிறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, டிசம்பர் 21

கோவை மாவட்ட மத்திய சிறையின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகச் சிறை கண்காணிப்பாளர் எம். செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், கோவை மத்திய சிறையில் பல்வேறு பிரிவில் காலிபணியிடங்கள் உள்ளன. உற்பத்தி பிரிவில் காலியாக உள்ள மின்கம்பியாளர் 2 காலிபணியிடங்களும், நெசவு பணியாளர் 1 காலிபணியிடமும், நெசவியல் வல்லுநர் 1 காலிபணியிடமும், தையல் போதகர் 2  காலிபணியிடங்கள் என மொத்தம் 6 காலிபணியிடங்கள் நிரப்பவதற்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. மின் கம்பியாளர் பணியிடத்திற்குப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள், இதர வகுப்பைச் சார்ந்தவர்களும், தையல் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் அருந்ததியினர், இதர வகுப்பைச் சேர்ந்தவர்களும், நெசவு பணியாளர், நெசவியல் வல்லுநர் பணியிடத்திற்கு அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். 

நெசவியல் வல்லுநர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக ஜனவரி 8-ம் தேதியன்றும், நெசவுப் பணியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக ஜனவரி 9-ம் தேதியும், தையல் போதகர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக 11-ம் தேதியும், மின்கம்பியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக 12-ம் தேதி என அனைத்து காலிப் பணியிடங்களுக்கும் அந்தந்த நாட்களில் காலை 11 மணியளவிலும் நேர்காணல் நடைபெறவுள்ளது. 

இந்த நேர்காணலில் கல்வித் தகுதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ், முன்அனுபவம் சான்றிதழ் மற்றும் முன்னுரிமைச் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு மேற்கண்ட நாட்களில், கோவை மத்திய சிறைகண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெறும். இவ்வாறு கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...