வடமாநில பெற்றோரால் கொடுமைப்படுத்தப்பட்ட இரு சிறுவர்கள்

திருப்பூர், டிசம்பர் 21

திருப்பூரில் வடமாநில பெற்றோரால் கொடுமைப்படுத்தப்பட்ட இரு சிறுவர்கள் காவல்துறையால் மீட்பு. தலைமறைவான பெற்றோர் குறித்து போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் . இந்நிலையில் திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையத்தில் சில நாட்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் இரு குழந்தைகளுடன் குடிபுகுந்துள்ளனர் . 

அந்த தம்பதி வந்ததில் இருந்தே குழந்தைகளை கொடுமைபடுத்தியுள்ளனர் . இந்நிலையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர் . அப்போது அவர்களது 4 வயது மகனின் உடலில் சூடு வைத்துள்ளனர்  இது குறித்து காவல்துறையினருக்கு தெரிவிப்பதாக அக்கம்பக்கதினர் கூறியதையடுத்து தம்பதியினர் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறை 4 வயதுடைய சிறுவன் மற்றும் இரண்டரை வயதுடைய சிறுமியை மீட்டு சிகிச்சையளித்து அனுப்பர்பாளையத்தில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர் .

 மேலும் தலைமறைவான   சிறுவர்களின் பெற்றோர்களன மணோஜ்-பிஜிலு தம்பதியினரை போலிசார் தேடி வருகின்றனர் .

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...