துணி துவைக்கும் போது இரண்டு பெண்கள் கிணற்றில் தவறி விழுந்து பலி

கோவை, டிசம்பர் 23

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்துள்ள புஜங்கனூரை சேர்ந்தவர் நீனா வயது 30. அதேபோல் அப்பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் விவசாயி இவரது மகள் அனிதா வயது 20. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ் சி 2ஆம்ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று பகல் 12 மணிக்கு நீனாவும், அனிதாவும் துணி துவைப்பதற்காக கிணற்றுக்கு சென்றார்கள். கிணற்றோரம் 2 பேரும் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக மண் சரிந்து மண்ணோடு மண்ணாக கிணற்றுக்குள் விழுந்தார்கள்.

இதில் அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்கள். இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் போலீசாரும் தீயணைப்புப்படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தற்போது உடல்களைத்தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...