ஈஷா அவுட்ரீச் சார்பில் நரசிபுரம் பள்ளி வளாக கட்டிடம் கட்டும் பூமி பூஜை மற்றும் மரம் நடுவிழா

கோவை, டிசம்பர் 25

கோவை, நஞ்சுண்டாபுரம் கிராமத்தின் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஈஷா அவுட்ரீச் மற்றும் கோயம்புத்தூர் பில்டர்ஸ் அன்டு கான்ட்ராக்ட் அஸோசியேஷன் இணைந்து புதிய அரங்கம் கட்ட பூமி பூஜை விழாவும், மேலும் 300 மரக்கன்றுகள் நடும் விழாவும் நஞ்சுண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் செந்தில் மற்றும் கோதலைவர் எஸ்.பி. அன்பரசன், ஈஷா யோகா மையத்தின் ஸ்வாமி அபிபாதா, கோயம்புத்தூர் பில்டர்ஸ் அன்டு கான்ட்ராக்ட் அஸோசியேஷன் தலைவர் சப்தரிஷி, செயலாளர் ஆர். கருணாநிதி, பள்ளி தலைமை ஆசிரியர் கே. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.



அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில் மெதுவாகக் கற்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஈஷா அவுட்ரீச்சினால் பணியமர்த்தப்பட்ட சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடங்களில் சிறப்பு பயிற்சி அளித்து அவர்கள் பள்ளி படிப்பை சுலபமாக கற்க உதவி வருகிறது. 10, 12-ஆம் வகுப்பில் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற இப்பயிற்சி அவர்களுக்கு உதவியாக அமையும். மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.



வாழ்வியல் கல்வி என்ற சிறப்பு பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நர்சரி உருவாக்கம், ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு, யோகா பயிற்சி போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறது.

மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி விளையாட்டில் ஈடுபடவைத்து வருடம் ஒரு முறை விளையாட்டு போட்டிகள் வைத்து விளையாட்டை ஊக்குவித்தல் போன்றவை இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது. 

மேலும் இலவச கலை மற்றும் கைவினை பொருட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. ஓவியம், எம்பிராய்டரி செய்தல், பொம்மை செய்தல், கூடை பின்னுதல் போன்றவை இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 9787774178, 9840872441 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...