ஒகி புயலால் தமிழக மீனவர்கள் 400 பேர் மாயம் : மாநில வாரியாக விவரத்தை வெளியிட்டது மத்திய அரசு

டிசம்பர் 27

ஒகி புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 400 பேர் மாயமானதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

ஒகி புயலில் சிக்கிய மாயமான மீனவர்களின் எண்ணிக்கையை மாநில வாரியாக, மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில், டிசம்பர் 15 வரை 400 தமிழக மீனவர்கள் மாயமாகி உள்ளதாகவும், டிசம்பர் 20 வரை 453 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக் கோரி மதுரை உய கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் டிசம்பர் 22ம் தேதியன்று தமிழக அரசு அளித்த பதிலில், ஒகி புயலில் சிக்கி மாயமான தமிழக மீனவர்கள் 271 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஒகி புயலில் மாயமான மீனவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் டிசம்பர் 23-ம் தேதி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 275 தமிழக மீனவர்கள் மாயமாகி இருப்பதாகக் கூறினார்.

மாயமான மீனவர்கள் குறித்து தமிழக அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களுக்கு இடையே முரண்பாடு நிலவு வரும் நிலையில், இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக மத்திய அரசு இன்று புதிய புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டிருப்பதாவது :

டிசம்பர் 15 வரை மாயமான மீனவர்கள் : 

தமிழகம் - 400, கேரளா - 261, லட்சத் தீவுகள் - 0 மொத்தம் : 661

டிசம்பர் 20 வரை மீட்கப்பட்ட மீனவர்கள் விபரம் : தமிழகம் - 453, கேரளா - 362, லட்சத்தீவுகள் - 30. மொத்தம் - 845

மேலும், எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் மாயமான மற்றும் மீட்கப்பட்ட மீனவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாயமான மீனவர்கள் குறித்து தகவல் தர வேண்டிய பொறுப்பு தமிழக மீன்வளத்துறைக்கு உள்ளது எனவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...