கணவன், மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை

திருப்பூர் அருகே கணவன், மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர், டிசம்பர் 29

திருப்பூர் அருகே கணவன் மனைவி கொடூரமாக வெட்டி கொலை. தப்பி ஓடிய  கொலையாளிகளுக்கு போலீஸ் வலை விச்சு. 

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் கொடுவாய் சாலையில் குடியிருந்து வந்தவர் முத்துகுமாரசாமி 70 வயது. விவசாயியான இவர் தனது  மனைவி தெய்வாத்தாளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 



நேற்று நள்ளிரவு அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் முத்துகுமாரசாமி வீட்டின் கதவு திறந்துகிடந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் உள்ள சமையல் அறையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது மனைவி தெய்வாத்தாள் வீட்டின் பக்கவாட்டில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். 

இச்சமவம் குறித்து உடனடியாக ரோந்து சென்ற போலீசார் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் இரவு வழக்கம் போல் உறங்க செல்லும் முன் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் அரிவாள் போன்ற ஆயுதங்களால்  தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. 

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மோப்ப நாய் அருகில் உள்ள கோழிப்பண்ணை வரை ஓடி நின்றது. இதனை அடுத்து அங்கு தங்கி இருந்த வட மாநில இளைஞரை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...