சினிமா மற்றும் அரசியலில் காலம் வரும் போது மாற்றம் வரும்: ரஜினிகாந்த் சூசகம்

சினிமா மற்றும் அரசியலில் காலம் வரும் போது மாற்றம் வரும் என நான்காவது நாளாக ரசிகர்கள் முன்பு நடிகர் ரஜினிகாந்த் சூசகமாக பேசியுள்ளார்.

டிசம்பர் 29

சினிமா மற்றும் அரசியலில் காலம் வரும் போது மாற்றம் வரும் என நான்காவது நாளாக ரசிகர்கள் முன்பு நடிகர் ரஜினிகாந்த் சூசகமாக பேசியுள்ளார். 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 4-வது நாளாக அவரது ரசிகர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் இதில் பங்கேற்றனர். இன்று ரசிகர்கள் முன்பு ரஜினி பேசும் போது, இன்று 4-வது நாள். இன்னும் 2 நாள் தான் இருக்கிறது. கோவை, எனக்கு முக்கியமான இடம். அங்கே என் நண்பர்கள் பலர்இருக்கிறார்கள். சுவாமி சச்சிதானந்தன் அவர்களின் ஊர். அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்தவர். பழனி சித்தர் ஆசீர்வாதத்தால் பிறந்தவர். இன்ஜினியரிங் படித்த அவர், தனது குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன், குடும்பத்தை வாழ்க்கையை விட்டு பழனி சாமிக்கு சிசியனாக மாறினார். 

பின்னர், இமயமலை சென்று சிவானந்த சாமியாரிடம் தீட்சை பெற்று சச்சிதானந்தன் என்று பெயர் பெற்றார். அதனைத் தொடர்ந்து, இலங்கையில் சில காலம் இருந்தார். பின்னர் அவரை சிவானந்தன் அமெரிக்காவுக்கு அனுப்பினார். அமெரிக்காவில் ஆன்மீகத்தைப் பரப்ப வேண்டும். யோகா கற்றுக் கொடுக்க வேண்டும், மதத்தை அல்ல என்று சிவானந்தன் கூறியிருந்தார். எனக்கு அவர் தான் மந்திர உபதேசனை செய்தார். லட்சக் கணக்கில் சீடர்கள் அங்கு இருக்கிறார்கள். பெரிய பெரிய தொழிலதிபர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் என கோடீஸ்வரர்கள் பலரும் அவரை சந்தித்து ஆசி பெறுகின்றனர். உபதேசனை கேட்கின்றனர். பல நாடுகளில் அவர்களது ஆசரமும் இருக்கிறது. 

அவர் சொல்லி தான் நான் பாபா படம் எடுத்தேன். அவர் இங்கு வந்து பாபா படம் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் இறக்கும் தருவாயில், நான் தான் அவரை கடைசியாக பார்த்தேன். அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதேபோல, தயானந்த சரஸ்வதி எனக்கு குரு. கோயம்புத்தூர் விமான நிலையம் போகும் போதெல்லாம் எனக்கு ஒரு நியாபகம் வரும். அண்ணாமலை படம் ரிலீஸ் ஆன நேரம், அங்கு என் நண்பரின் குடும்ப திருமணத்திற்காகச் சென்றேன். நானும், சிவாஜியும் சென்றோம். அங்கு என்னை பார்க்க கூடியிருந்த ரசிகர்கள் ஏராளம். 

விமான நிலையத்தில் ரஜினி வாழ்க என அவர்கள் கத்தினர். சிவாஜி என்னை பார்த்து சிரிக்கிறார். என்னடா நழுவுற, உன் காலம் டா, நல்லா உழை, நல்ல படங்கள் கொடு, நம்ம காலத்தில் நாம நல்ல உழைத்தோம். அங்க கை காட்டு, இங்கே கை காட்டு, என்னிடம் கூறி வந்தார். நடிப்பை தாண்டி பல நற்பண்புகள் சிவாஜியிடம் இருந்தது. வாழ்க்கையில் மரியாதை தான் முக்கியம். நல்ல குணாதிசியம் இருந்தால் தான் மரியாதை கொடுப்பார்கள். அதில் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். தான் எல்லாருடைய மனதிலும் வாழ்கிறார் என்றார், அவருடைய குணாதிசயம் தான் அதற்கு காரணம். அந்த மதிப்பு தான் முக்கியம். 

சில வருடங்கள் கழித்து மீண்டும் கோவையில் வேறொரு சாமியாரை பார்க்க சென்றேன். அப்போது என்னை வர வேண்டாம் என்று சொன்னார்கள். ஏதோ ஒரு நடிகரின் ரசிகர்கள் ரொம்ப பேர் ஆசிரமத்தை சூழ்ந்திருக்கிறார்கள். அவர் வந்து சென்ற பிறகு வாங்கள் என்றனர். எதிலுமே காலம் தான் முக்கியம். உழைப்பு, திறமை முக்கியம் தான். அதெல்லாம் அதுக்கு அப்புறம் தான். காலம் வரும் போது அனைவரும் மாறுவார்கள். காலம் வரும்போது, சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் மாற்றம் வரும், காலம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.

குடும்பம், தாய், தந்தை, பசங்களை பார்த்துக் கொண்டு மதிக்கத்தக்கவர்களாக வாழ வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...