உதகையில் முதலமைச்சரை வரவேற்ற பேனர் கலாச்சாரம்: விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளைக் கட்டியதாகப் புகார்

உதகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

டிசம்பர் 30

உதகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

உதைகயில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விழாவிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேனர்கள் ஒரு புறமும், எம்ஜிஆர் ஜெயலலிதா பேனர்கள் ஒரு புறமும் வைக்கப்பட்டுள்ளன. கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள், கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்களை உதகையில் நிறுத்த கூடாது என்று போலீஸ் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், தங்கும் விடுதிகள் அனைத்தும் விழா ஏற்பாட்டாளர்களால் முடக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...