”புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க கண்காணிப்பு மையங்கள்”

கோவை, டிசம்பர் 30

புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மையங்கள் திறக்கப்படுகிறது. 

புத்தாண்டு கொண்டாடும் தருணத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதை தடுப்பதற்கு "கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை "மாநகர காவல் துறையினருடன் இணைந்து கோவை மாநகரத்தின் முக்கியசாலை ஓரங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு அத்துமீறல்கள் சாலைகளில் நடந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு சாலைகளில் மது அருந்திவிட்டு ஆட்டம், பாட்டம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் சிலர் ஈடுபடுகின்றனர். மேலும், சிலர் மது அருந்திவிட்டு வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். இந்த விபத்தில் இவர்கள் மட்டுமில்லாமல் சில நேரங்களில் அப்பாவி மக்களும் சிக்கி உயிர் இழக்க நேரிடுகிறது .

இத்தகைய குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நூதன நடவடிக்கைகளை மாநகர காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். இம்முறையும், கோவை மாநகர காவல்துறை, கேஎம்சிஎச் மருத்துவமனையுடன் இணைந்து 22 கண்காணிப்பு மையங்கள் அமைக்க உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க இந்த கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மையங்களில் அவர்களுக்கு, கஸ்தூரிபா காந்தியின் புனர்வாழ்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தன்னார்வ தொண்டர்கள் 'கவுன்சிலிங்' (ஆலோசனை) அளித்து இரவு முழுவதும் கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.

இதை பற்றி கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் நல்ல பழனிசாமி கூறுகையில், இந்த கண்காணிப்பு மையங்கள் மாநகரத்தின் முக்கியமான சாலைகளில் அமைக்கப்படும் மற்றும் முன்னெச்சரிக்கையாக முக்கிய இடத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும் என்றார். மேலும், இதன்மூலம் விபத்து இல்லாத 2018- ஐ புத்தாண்டாக கொண்டாட முயற்சி செய்வோம். எனக் கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...