ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ”மண்ட பத்திரம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, டிசம்பர் 30

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை - திருச்சி சாலையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.



சுங்கம் பகுதியில் ரோட்டரேக்ட் சங்கத்தின் சார்பில், ”மண்ட பத்திரம்” என்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைக் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சி. கோடிசெல்வன் தொடங்கி வைத்தார். இந்த வாகனப் பேரணியானது, ஆர்.எஸ்.புரம் முதல் ஜிசிடி வரை சென்றது. அப்போது, வாகன ஓட்டிகளுக்கு, ஹெல்மெட் அத்தியாசவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக, ”வி லவ் ஹெல்மெட்” என்ற வாசகத்தை, ஹெல்மெட் அணியாமல் ஓட்டி வருபவர்களின் இருசக்கரவாகனங்களில் ஒட்டினர். இதில், 80-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் மற்றும் சாக்லெட்டுகளை வழங்கினர்.



இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய ரோட்டரேக்ட் கிளப்பின் சமூக சேவை இயக்குநர் பி. சிவசங்கர், ஹெல்மெட் அணிவது குறித்த இந்த விழிப்புணர்வு பேரணி, வரும்காலத்தில் பிற பகுதிகளிலும் நடத்தப்படும். என்றார்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...