புத்தாண்டு தினவிழா நிகழ்ச்சிக் கொண்டாட்டம் தொடர்பான காவல்துறையின் அறிவுரைகளும், விதிமுறைகளும்.....


கோவை, டிசம்பர் 31

2018 புத்தாண்டு தினவிழா நிகழ்ச்சிகள் கொண்டாட்டம் தொடர்பான கோவை மாநகரக் காவல்துறையினரின் அறிவுரைகள் பின்வருமாறு :-

1) பொதுமக்கள் தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டுநல் கூடாது

2) மதுகுடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுதல் கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டுபவர் மீது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வது உட்படஉரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

3) புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களைக் கேலி, கிண்டல் செய்யக்கூடாது

4) பொதுஇடங்களில், சாலைகளில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது

5) பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல் மற்றும் குறும்பான செயல்களைச் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

6) அனுமதிக்கப்பட்ட ஓட்டல் பார்கள், மதுபானக்கடைகளை குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு மேலாக செயல்பட அனுமியில்லை. மீறுபவர்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

7) உணவகங்கள், பேக்கரிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் திறந்திருக்கக்கூடாது.

8) இன்று இரவு 11 மணி முதல் நாளை (ஜன.,1) அதிகாலை 3 மணிவரை புதிதாக திறக்கப்பட்டுள்ள டாக்டர் நஞ்சப்பா சாலை மேம்பாலம் உள்பட அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம் மற்றும் சுங்கம், உக்கடம் பைபாஸ் மேம்பாலங்களில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. 

2018 புத்தாண்டு தினவிழா நிகழ்ச்சிகள் கொண்டாட்டம் தொடர்பாக லாட்ஜ், வணிக வளாகங்கள், கிளப் மற்றும் விடுதிகள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் :-

1) புத்தாண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் காவல்துறையின் முன் அனுமதிபெற்றே நடத்தப்பட வேண்டும். 

2) புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் நடக்கும் இடங்களில் மேடைகளுக்கு தாங்கும்திறன் சான்றிதழ், மின்சாதனங்கள் குறித்த சான்றிதழ், தீயணைப்புத்துறை சான்றிதழ்கள் முன்னரே பெறப்பட வேண்டும். 

3) அவசரகால வழிகள் இருத்தல் வேண்டும். 

4) ஆபாச நடனங்கள் மற்றும் கலாச்சார சீரழிவு ஏற்படுத்தும் விதமான நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை.

5) வானவேடிக்கைகள் உரிய அனுமதியின்றி நடத்தக்கூடாது. 

6) நிகழ்ச்சிகளுக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். 

7) புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஒலிபெருக்கி கருவிகள், 45 ஒலிஅளவிற்கு மேலாக இருத்தல் கூடாது.

8) புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் நபர்களை அவர்களுடைய இடத்திற்குக் கொண்டுசென்று சேர்ப்பது நிகழ்ச்சி நடத்துபவர்களின் பொறுப்பாகும். 

9) தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களைப் பயன்படுத்துதல் கூடாது.

10) புத்தாண்டு என்பதற்காக எந்த ஒரு சிறப்பு சலுகையும், யாருக்கும் வழங்கப்படமாட்டாது. சட்டவிதிமுறைகளைப் பின்பற்றி புத்தாண்டு தின கொண்டாட்டங்களை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாவண்ணம் சாலை விதிகளை மதித்தும் விபத்தில்லாத, குற்றமில்லாத, மகிழ்ச்சியான, பாதுகாப்பான புத்தாண்டு தினமாகக் கொண்டாட காவல்துறையின் நல்வாழ்த்துக்கள்.

பொதுமக்கள் காவல்துறையின் வேண்டுகோளின்படி நடந்துகொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...