குற்றங்கள்....! விபத்துகள்....! புள்ளிவிவரங்களை வெளியிட்டார் காவல் ஆணையர்


கோவை, டிசம்பர் 31

புத்தாண்டு நாளை தொடங்கவுள்ள நிலையில், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த குற்றம் மற்றும் விபத்து சம்பவங்கள் குறித்த புள்ளி விவரங்களைக் கோவை காவல் ஆணையர் கே. பெரியய்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

அவர் கூறுகையில்,  2017-ம் ஆண்டைப் பொருத்தவரை கோவை மாநகர காவல்துறையின் தொடர் ரோந்து மற்றும் குற்றதடுப்பு பணிகளில் தீவிர ஈடுபாடு காட்டப்பட்டதன் விளைவாக கொடுங்குற்றங்களான ஆதாய கொலை, கூட்டுக்கொள்ளை போன்றே குற்றங்கள் மாநகரில் நடைபெறவில்லையெனினும் வருட இறுதியில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஒருவாரத்திற்குள் வடமாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு துப்பு துலங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கோவை மாநகருக்குள் வருவதற்கு, தடாகம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, அவினாசி சாலை, பாலக்காடு சாலை போன்ற 7 சாலைகள் உள்ளன. கோவையில் நடைபெற்ற வங்கி கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு, அனைத்து சாலைகளிலும் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டும், தடுப்புகளை அமைத்து வாகனங்கள் தீவிர தணிக்கை செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை இனி தொடர்ந்து நடைபெறும். 

கோவை மாநகரில் தங்கி பணிபுரியும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் புகைப்படம், ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை, அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் போலீஸாரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

கோவை மாநகரில் 2016-ம் ஆண்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் விபத்து வழக்குளின் விபரங்கள் :

நடந்த ஆதாய கொள்ளை சம்பவங்களில் களவுபோன சொத்துகள் சுமார் ரூ. 3,62,39,249 மதிப்புள்ளவை கைப்பற்றப்பட்டன. 

கோவை மாநகரில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக 25 கொலை வழக்குகளும், காய வழக்குகள் (அற்ப + கொடுங்காயங்கள்) பொறுத்தமட்டிர்ல 258 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கலக வழக்குகளைப் பொறுத்தவரையில் 37 வழக்குகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கோவை மாநகரில் 25 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நகரில் சட்டம், ஒழுங்கிற்கு பிரச்சனை விளைவித்ததாக 67 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாலை விதிகளை மீறியதால், 1,377 சாலைவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 

சாலைவிதிமுறை மீறல்களுக்காக 4,11,366 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 6,20,21,665 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் இதுவரை 302 பேர் பலியாகியுள்ளனர்.

கோவை மாநகரில் 2017-ம் ஆண்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் விபத்து வழக்குளின் விபரங்கள் :

ஆதாய கொள்ளை சம்பவங்களில் 81 சதவீதம் வழக்குகள் துப்புதுலக்கப்பட்டு அவற்றில் 85 சதவீதம் களவுபோன சொத்துகள் சுமார் ரூ. 5,20,00,000 மதிப்புள்ளவை கைப்பற்றப்பட்டன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 9 சதவீதம் வழக்குகள் அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டும், 8 சதவீதம் கூடுதலாக களவு போன பொதுமக்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் நிகழ்ந்த சட்டம், ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக 22 கொலை வழக்குகளும், காய வழக்குகள் (அற்ப + கொடுங்காயங்கள்) பொறுத்தமட்டில் 204 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒப்பிடுகையில்  4 வழக்குகள் குறைவாகியுள்ளது. 

கலக வழக்குகளைப் பொறுத்தவரையில் 13 வழக்குகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனைச் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 35 வழக்குகள் குறைவானதாகும். 

கோவை மாநகரில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 3 குறைவான சம்பவங்களாகும்.

நகரில் சட்டம், ஒழுங்கிற்கு பிரச்சனை விளைவித்ததாக 81 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 14 அதிகமாகும். 

சாலை விதிகளை தீவிர முறையில் அமல்படுத்தப்பட்டதில் 2017-ம் ஆண்டு 1,294 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 83 விபத்துக்கள் குறைந்துள்ளது. 

சாலைவிதிமுறை மீறல்களுக்காக 5,27,504 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், ரூ. 8,02,17,304 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது, 1,16,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கூடுதல் அபராதமாக ரூ. 1,81,95,639 வசூல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் இந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் இதுவரை 302 பேர் பலியாகியுள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 2,500 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. (ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து என்ற சட்டம் 2017-ல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது).

மேலும், சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கி 2017 ஜனவரி மாதம் வரை, இந்து முன்னணி பிரமுகர் கொலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள், பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களின் வருகை மற்றும் பாதுகாப்பு அனைத்திலும் சீரிய கவனத்துடன் செயல்பட்டதில், மாநகரில் பொது அமைதியானது பாதுகாக்கப்பட்டுள்ளது. 

வரும் புத்தாண்டில் கோவை மாநகர காவல்துறையினரின் பணியானது, சீரிய முறையில் தொடரும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

காவல் ஆணையர் கே. பெரியசாமி தலைமையில் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், துணை ஆணையர்கள் பெருமாள் (குற்றப்பிரிவு), லட்சுமி (சட்டம்,ஒழுங்கு), சுஜித்குமார் (போக்குவரத்து) மற்றும் தர்மராஜ் (மத்திய) ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...